செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்தியாவின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்ட வாய்ப்வை கடினமாக்கியது நியூஸிலாந்து

இந்தியாவின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்ட வாய்ப்வை கடினமாக்கியது நியூஸிலாந்து

1 minutes read

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டியின் கடைசி நாளன நாளான இன்று திங்கட்கிழமை (23) தனது இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து, மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 75 ஓவர்கள் தாக்குப்பிடித்து 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து மேலும் 120 ஓட்டங்களை மொத்த எண்ணிக்கைக்கு சேர்த்து 239 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிற்பகல் 5.40 மணிக்கு ஆட்டம் முடிவுக்கு வந்தது.

அப்போது தாக சாந்திக்காக போட்டி இடைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், ஆட்டத்தை முடித்துக்கொள்ளும் நோக்கில் டெரில் மிச்செல் கைலாகு கொடுக்க அதனை இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில் ஏற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இந்தியாவின் இறுதி ஆட்ட வாய்ப்பை நியூஸிலாந்து கடினமாக்கியுள்ளது.

அதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் நியூஸிலாந்து 2ஆம் இடத்தில் இருந்து 3ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

கடைசி நாளன்று துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த டெவன் கொன்வே 65 ஓட்டங்களுடனும் ரச்சின் ரவிந்த்ரா 37 ஓட்டங்களுடனும்   ஆட்டம் இழந்தனர்.

ஐந்தாவதாக ஆட்டம் இழந்த டொம் ப்ளண்டெல் 15 ஓட்டங்களைப் பெற்றார். (176 – 5 விக்.)

தொடர்ந்து டெரில் மிச்செல் (49 ஆ.இ.), க்ளென் பிலிப்ஸ் (26 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 368 ஓட்டங்களையும் இந்தியா 9 விக்கெட்களை இழந்து 720 ஓட்டங்களையும் பெற்றன.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 368 (ஹென்றி நிக்கல்ஸ் 175, க்ளென் பிலிப்ஸ் 118, ஜஸ்ப்ரிட் பும்ரா 92 – 4 விக்., ஆகாஷ் தீப் 53 – 3 விக்.), அனுஷ் கம்போஜ் 69 – 2 விக்.)

இந்தியா 1ஆவது இன்: 720 – 9 விக். டிக்ளயார்ட் (கே.எல். ராகுல் 136, ரிஷாந்த் பான்ட் 128, ஷுப்மான் கில் 98, யஷஸ்வி ஜய்ஸ்வால் 85, தேவ்தூத் படிக்கல் 80, த்ருவ் ஜுரெல் 78, க்ளென் பிலிப்ஸ் 154 – 3 விக்., ரச்சின் ரவிந்த்ர 44 – 2 விக்.)

நியூஸிலாந்து 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 239 – 5 விக். (டெவன் கொன்வோய் 65, டெரில் மிச்செல் 49 ஆ.இ., ரச்சின் ரவிந்த்ரா 37, ஹென்றி நிக்கல்ஸ் 31, க்ளென் பிலிப்ஸ் 26 ஆ.இ. ப்ராசித் கிரிஷ்ணா 23 – 2 விக்.)

ஆட்டநாயகன்: ஹென்றி நிக்கல்ஸ்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.