செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பண முதலீட்டு மோசடியை விவரிக்கும் நடிகர் அஜய் நடிக்கும் ‘மதுர மோசடி’

பண முதலீட்டு மோசடியை விவரிக்கும் நடிகர் அஜய் நடிக்கும் ‘மதுர மோசடி’

1 minutes read

நடிகர் அஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மதுர மோசடி’ திரைப்படம்-  சிட்ஃபண்ட் எனும் தனியார் பண முதலீட்டு திட்டத்தில் நடைபெறும் மோசடியை மையப்படுத்தி தயாராகி உள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வி. கே. விஜய கண்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மதுர மோசடி’ திரைப்படத்தில் அஜய், அர்ச்சனா, தேவதர்ஷினி, ‘காதல்’ சுகுமார், அப்புக் குட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ். கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பானு ஜேக்கப் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை யுவா ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். சங்கரநாராயணன் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் தங்களுடைய பணத்தை சேமிப்பதற்காக தனியார் நிறுவனத்தை நாடுகிறார்கள். அவர்களுக்கு நடைபெறும் மோசடிகள் குறித்தும்.. குடும்ப உறவுகளை இணைத்தும்.. இப்படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கும் இத்திரைப்படம் விரைவில் படமாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.