செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதால் கிடைக்கும் டொலர்கள் | பொன்சேகா கடுமையான சாடல்

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதால் கிடைக்கும் டொலர்கள் | பொன்சேகா கடுமையான சாடல்

0 minutes read

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.

டொலர் தேவையில்லை

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதால் கிடைக்கும் டொலர்கள்: பொன்சேகா கடுமையான சாடல் | Dollars Generated By Lifting Ban On Ltte Fonseka

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”விடுதலைப்புலிகளை மீண்டும் தாலாட்டுவதற்கு விக்னேஸ்வரன் முற்படுகின்றாரா? அவருக்கு வயதுபோய் விட்டது.

நீதியரசர் பதவியை வகித்தவரே விக்னேஸ்வரன். எதற்காக அவர் இப்படிக் கதைக்கின்றார். அவருக்கு பைத்தியம் இருக்க வேண்டும். அவர் கூறும் வழியில் எமக்கு டொலர் தேவையில்லை” என கூறியுள்ளார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.