செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் சிரேஸ்ட வீரர்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப்போட்டி

வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் சிரேஸ்ட வீரர்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப்போட்டி

1 minutes read

வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஒழுங்கமைப்பில் உதைபந்தாட்ட சங்கத்தின் அங்கத்துவ கழங்கங்களின் சிரேஸ்ட வீரர்களுக்கான (senior challenge trophy) அணிக்கு ஒன்பது பேர் கொண்ட சுற்று போட்டியின் இறுதி போட்டி இன்று (4.09) மாலை 5.30 மணியளவில் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதி போட்டியில் North end FC & Vanni kings FC ஆகிய அணிகள் பலபரீட்சையில் மோதின. Vanni kings FC அணியினர் கடுமையாக போராடியும் போட்டியை வெல்ல முடியவில்லை. North end FC அணியினர் போட்டி நிறைவில் 7:1 என்ற கோல்கணக்கில் போட்டியை வென்று சம்பியன் பட்டத்தை தமதாக்கி கொண்டனர். வெற்றி பெற்ற அணியினர் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான வெற்றி கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது சீருடையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இறுதி போட்டியில் இலங்கை உதைபந்தாட்டத்தின் உப பொருளாளரும் வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான அ.நாகராஜன் , வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் மு.சௌமியன், உபதலைவர் மு.புலேந்திரன் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.