வெளிநாட்டைச் சேர்ந்த 10 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மிக பயங்கரமான தீவிரவாதிகள் 2 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை, கில்கிட் சிறையில் இருந்து 4 தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர். காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையில், ஒரு கைதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒருவர் காயத்துடன் பிடிபட்டார். மற்ற இருவரும் தப்பியோடிவிட்டனர்.
தப்பிச் சென்ற 2 தீவிரவாதிகளும் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 10 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களைத் தேடும் பணி பாகிஸ்தானில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.