செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மாணவர்களுக்கு பெனாசிர் கொலையில் தொடர்பு மாணவர்களுக்கு பெனாசிர் கொலையில் தொடர்பு

மாணவர்களுக்கு பெனாசிர் கொலையில் தொடர்பு மாணவர்களுக்கு பெனாசிர் கொலையில் தொடர்பு

1 minutes read

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலையில், மதக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு தொடர்பு உள்ளது,” என, அந்நாட்டு புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.

பெனாசிர் கொலை வழக்கு விசாரணை, ராவல்பிண்டியில், அடியாலா சிறையில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பர்வேஸ் இஸ்மாயில் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அப்போது, ”தலிபான்களின் தந்தை என வர்ணிக்கப்படும், ஜலாலுதீன் ஹக்கானி என்பவர் நடத்தும் தருல் உலும் ஹக்கானியா என்ற பள்ளியை சேர்ந்த மாணவர்களுக்கு, பெனாசிர் கொலையில் தொடர்பு உள்ளது,” என, தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை காவலர் நசீர் அகமது தெரிவித்தார். அதை, அப்பள்ளியின் இயக்குனர் விசால் அகமது ஒப்புக் கொண்டார். பெனாசிரை கொல்வதற்கு, மனித வெடிகுண்டாக மாறிய அப்துல்லாவும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ரஷீத் ஆகியோரும், உலும் ஹக்கானியா பள்ளி மாணவர்கள் என்று அவர் கூறினார். அதே சமயம், படுகொலையில், அந்த மாணவர்களுடன், தம் பள்ளிக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், படிப்பை பாதியிலேயே அவர்கள் விட்டு விட்டுச் சென்று விட்டதாகவும், விசால் அகமது தெரிவித்தார். பாகிஸ்தானில், கைபர் பக்டுன்க்வா மாகாணம், நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள அகோரா கட்டக் என்ற இடத்தில், உலும் ஹக்கானியா பள்ளி உள்ளது. சமியுல் ஹக் என்பவருக்கு சொந்தமான இப்பள்ளி, ஹக்கானி குழுவை தோற்றுவித்த, ஜலாலுதீன் ஹக்கானி உள்ளிட்ட ஏராளமான தலிபான் தலைவர்கள், போராளிகளை உருவாக்கியுள்ளது. இப்பள்ளியில் பயின்றோர், தங்கள் பெயருடன், ஹக்கானி என்ற சொல்லை சேர்த்துக் கொள்வர். ஆப்கன் தலிபான்களின் செயல்களை, வெளிப்படையாக ஆதரிக்கும் ஹக்கானி, பல முறை எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார். கடந்த, 2007ம் ஆண்டு, பெனாசீர் பூட்டோ, வெடிகுண்டு தாக்குதலில் பலியானார். இது தொடர்பாக, தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், பாக்., முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உள்ளிட்ட ஏராளமானோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.