இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் தீவிரமாக நடந்த சமயத்தில் 2007-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ஏராளமான தமிழ் இளைஞர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கடத்திச்செல்லப்பட்டனர்.
மேலும் ஏராளமான பேர் காணாமல் போனார்கள்.
இது தொடர்பாக இலங்கை கடற்படை மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இது தொடர்பாக 2010-ம் ஆண்டு புகார் செய்யப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக இலங்கை சி.ஐ.டி. போலீசார் கடற்படை அதிகாரி ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அஜித் ரோகனா தெரிவித்தார்.