இலங்கையில் முந்தைய ராஜபட்ச ஆட்சியில், ரத்தினக் கற்கள் எடுப்பதற்காக, 16 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சுரங்க உரிமங்களை மைத்ரிபாலா சிறீசேனா அரசு ரத்து செய்துள்ளது.
கொழும்பில் உள்ளூர் தொழில் துறையினருடன் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, சிறீசேனா மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
இதுகுறித்து அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக, எந்தவித விசாரணையுமின்றி, 16 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.