அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டைம் பத்திரிகை சர்வதேச அளவில் இன்டர்நெட் மூலம் மக்களை கவரும் பிரபலங்களின் 30 பேர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
அதில், அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹாரிபாட்டர் தொடர்களின் இங்கிலாந்து கதாசிரியர் ஜெ.ரவுலிங்குடன் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் (இன்டர்நெட்டில்) உறுப்பினராக இருக்கிறார். அதன் முலம் இந்திய மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார்.
தற்போது அவருடன் 3 கோடியே 80 லட்சம் பேர் (38 மில்லியன்) தொடர்பில் உள்ளனர். இதன் மூலம் இன்டர்நெட் மூலம் அதிக அளவில் மக்களை கவரும் 30 பிரபலங்கள் பட்டியலில் பிரதமர் மோடியும் உள்ளார்.
இவர் தவிர ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கார் டஷியன், பாடகர் ஜஸ்டின் பீபர், நடிகை கிவ்னித் பால்ட் ரோவ், சீன நடிகை யவோ சென், பாடகி ஷகீரா, டி.வி. நடிகர் ஜிம்மி பால்லோன் உள்ளிட்டோரும் இப்பட்டியலில் அடங்குவர்.