செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி மரணம்!

யாழில் சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி மரணம்!

0 minutes read
யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று திங்கட்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி குடும்பஸ்தரும் அவரது மகனும் கன்னாதிட்டிப் பகுதியில் உள்ள நகை செய்யும் இடத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மேற்படி நபர் நேற்று வேலைக்காகச் சென்றிருந்தார். பின்னர் மகன் வேலைக்குச் சென்றபோது அங்கு தந்தை மயக்கமடைந்து இருந்ததை அவதானித்தார்.

குறித்த விடயத்தைத் தாய்க்குத் தெரியப்படுத்திய மகன், தாயை அழைத்து மயக்கமடைந்த தந்தையை யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சயனைட் அருந்தியதால் அவரது மரணம் சம்பவித்துள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.