செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேநீர் விலையில் மாற்றம்!

தேநீர் விலையில் மாற்றம்!

1 minutes read

தேநீர், பால் கலந்த தேநீர், மற்றும் கோப்பி பானம் ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்று முதல் பால் தேநீரின் விலையை 100 ரூபாவாகவும், தேநீரின் விலையை 30 ரூபாவாகவும் விற்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

தேநீர் விலையில் மாற்றம்! வெளியானது அறிவிப்பு | Tea Price In Sri Lanka

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

மேலும் தெரிவிக்கையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4280 ரூபாவாக நிர்ணயிக்கப்படடுள்ளது.

அத்துடன் 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 107 ரூபாவினாலும் 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 48 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

தேநீர் விலையில் மாற்றம்! வெளியானது அறிவிப்பு | Tea Price In Sri Lanka

லாஃப் எரிவாயு

எவ்வாறாயினும், லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை குறைத்தமைக்கு நிகராக லாஃப் நிறுவனமும் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் லாஃப் நிறுவனம் விலைகுறைப்பிற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையாயின் லாஃப் நிறுவனத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.