செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி கோடிக்கணக்கில் வருவாய் 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி கோடிக்கணக்கில் வருவாய்

100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி கோடிக்கணக்கில் வருவாய் 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி கோடிக்கணக்கில் வருவாய்

1 minutes read

அமெரிக்காவில் இணையதளம் வாயிலாக 100 கோடி மின்னஞ்சல் முகவரிகளைத் திருடி, அந்த முகவரிகளுக்கு விளம்பர அஞ்சல் அனுப்பியதன் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய வழக்கில் மூன்று பேர் மீதான குற்றச்சாட்டு வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜியார் ஹோங் வூ (25), வியட் குவோக் குயேன் (28) ஆகிய வியத்நாமைச் சேர்ந்த இருவரும், டேவிட் மானுவேல் சான்டாஸ் டாசில்வா (33) என்ற கனடா நாட்டைச் சேர்ந்தவரும் குற்றவாளிகள் என அட்லாண்டா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுகுறித்து ஊடகங்களில் வெளியான தகவல்:

இரண்டு வணிக நிறுவனங்களின் மின்னணு தகவல் சேமிப்பகத்தில் இணையதளம் வாயிலாக ஊடுருவிய அந்த நபர்கள், அந்த நிறுவனங்களின் 100 கோடி வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடியுள்ளனர்.

மேலும், அந்த முகவரிகளுக்கு அந்த நிறுவனங்களின் இணையதளத் தொடர்பைப் பயன்படுத்தி விளம்பர அஞ்சல்களை அவர்கள் அனுப்பியுள்ளனர்.

இந்த விளம்பரங்களால் பலனடைந்த நிறுவனங்களிடமிருந்து 20 லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.12.6 கோடி) வருவாயாகப் பெற்றுள்ளனர்.

இணையதளத்தைப் பயன்படுத்தி மிகப் பிரம்மாண்டமான அளவில் மின்னணுத் தகவல்கள் திருடப்பட்ட மிகச் சில வழக்குகளில் இதுவும் ஒன்று என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.