செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விடுதலையாகும் அரசியல் கைதிகள் பட்டியலில் விபுசிகாவின் அம்மாவின் பெயர்?விடுதலையாகும் அரசியல் கைதிகள் பட்டியலில் விபுசிகாவின் அம்மாவின் பெயர்?

விடுதலையாகும் அரசியல் கைதிகள் பட்டியலில் விபுசிகாவின் அம்மாவின் பெயர்?விடுதலையாகும் அரசியல் கைதிகள் பட்டியலில் விபுசிகாவின் அம்மாவின் பெயர்?

1 minutes read

பிரதமர் மோடி கொழும்பு வருவதை முன்னிட்டு, சிறையில் உள்ள பாலேந்திரன் ஜெயகுமாரியை, இலங்கை அரசு விடுதலை செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

இலங்கை இறுதிப் போரின் போது, காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை மீட்கும் போராட்டத்தில், விதவையான பாலேந்திரன் ஜெயகுமாரி, 50, ஈடுபட்டு உள்ளார். போரில், இவரது இளம் வயது மகனும் காணாமல் போயுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு, கிளிநொச்சியில், போலீசாரை, துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்ற கைதியை பாதுகாத்ததாக கூறி, ஜெயகுமாரி கைது செய்யப்பட்டார்.

 

ஆனால், ‘போரில் காணாமல் போனோர் குறித்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் தான், அவர், முந்தைய அதிபர் ராஜபக் ஷே அரசால் கைது செய்யப்பட்டார்,’ என்று, கூறப்படுகிறது. இந்நிலையில், இலங்கை அதிபராக பொறுப்பேற்ற சிறிசேன, ”அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்,” என்று அறிவித்தார்.

 

இதையடுத்து, சிறையில் உள்ள, 275 தமிழர்களின் பட்டியலை, போலீசார், சிறிசேனவிடம் வழங்கி உள்ளனர். அதன் அடிப்படையில், பிரதமர் மோடி, வரும் 13ம் தேதி, இரு நாள் பயணமாக இலங்கை வரும் போது, ஜெயகுமாரி உள்ளிட்ட சிலரை விடுவிக்க, சிறிசேன அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.