ஆயுத வழக்கு ஒன்றில் நடத்தப்பட்டு வரும் விசாரணை முடியும் வரையில் வவெளிநாடு செல்வதற்கு ராஜபக்ஷே சகோதரர் உட்பட மூன்று பேருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் காலே துறைமுகத்தில் ஆயுதங்களுடன் வந்த கப்பல் ஒன்று பிடிபட்டது. அதில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் தனியாருக்கு சொந்தமான குடோனில் பாதுகாத்து வைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனால் கப்பல் படைக்கு வருமான இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளரும் , ராஜபக்ஷேயின் சகோதரரருமான கோத்தபயே ராஜபக்ஷே உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை காலே துறைமுக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடியும் வரையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1