காலை உணவுக்காக கார்ன் பிளேக்ஸ் டப்பாவை திறந்த வாலிபர், அதில் இருந்த மலைப்பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் வசிப்பவர் ஜாரெட் ஸ்மித், 22. தன்னுடைய வீட்டில், காலை உணவுக்காக, குளிர் சாதன பெட்டியில் இருந்த கார்ன் பிளேக்ஸ் டப்பாவை எடுத்து, உணவு மேஜையில் வைத்தார். கார்ன் பிளேக்ஸ் டப்பா வழக்கத்திற்கு மாறாக எடை அதிகமாக தோன்றவே, அதை திறந்து பார்த்தார். உள்ளே மலைப்பாம்பு ஒன்று சுருண்ட நிலையில் இருப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்தார். இந்தத் தகவலை, பக்கத்து அறையில் இருந்த, தன் தந்தையிடம் கூற, அவர், வனத்துறையின் மீட்புக் குழுவுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர், மலைப்பாம்பை பிடித்து, காட்டுக்குள் விட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு, ‘டைமண்ட்’ மலைப்பாம்பு என்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய கொடிய விஷமுள்ளது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
0