செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆலம் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றிய ராணுவம்ஆலம் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றிய ராணுவம்

ஆலம் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றிய ராணுவம்ஆலம் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றிய ராணுவம்

1 minutes read

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள முக்கிய நகரான திக்ரித் நகரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ராணுவம் இன்று அந்நகருக்குள் நுழைந்தது.

ஈராக்கில் உள்ள சில பகுதிகளையும், சிரியாவில் உள்ள சில நகரங்களையும் தாக்குதல் நடத்தி கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் அப்பகுதிக்கு இஸ்லாமிய நாடு என்ற பெயரிட்டு தனி அரசாங்கம் நடத்தி வருகின்றனர். அப்பகுதிகளில் இருந்த பல நாடுகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தீவிரவாதிகள், அவர்களை ஈவு இரக்கமின்றி கழுத்தை அறுத்தும், உயிரோடு தீ வைத்து எரித்தும் படுகொலை செய்தனர்.
இந்நிலையில், தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரை மீட்க ஈராக் அரசு முடிவு செய்தது. இதற்காக திக்ரித் நகரை சுற்றி வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த நகரை விட்டு வெளியேற்றப்பட்டனர். பின்னர் திக்ரித் நகரில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது வான்வழியாகவும், தரை வழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலின் போது நேற்று திக்ரித் எல்லையில் உள்ள ஆலம் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றினர். இன்று ஈராக் ராணுவமும் அவர்களுக்கு ஆதரவான ஷியா தன்னார்வப் படையினரும் திக்ரித் நகருக்குள் அதிரடியாக நுழைந்தனர். நகரின் வடக்குப் பகுதி வழியாக நுழைந்த இந்த படையினர் இனி ஐ.எஸ். படையினரை நேருக்கு நேர் எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.
ஆனால், தரையில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகள், மற்றும் மறைந்திருந்து தாக்கும் தீவிரவாதிகளையும் சமாளித்து மேலும் முன்னேறுவது ராணுவத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈராக் படையினருக்கு ஈரான் ராணுவ ஆலோசகர்கள் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.