செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆவணப்படங்களுக்கும் தணிக்கை வாரியம் அமைக்க வேண்டும் – நிர்பயா நண்பர் ஆவணப்படங்களுக்கும் தணிக்கை வாரியம் அமைக்க வேண்டும் – நிர்பயா நண்பர்

ஆவணப்படங்களுக்கும் தணிக்கை வாரியம் அமைக்க வேண்டும் – நிர்பயா நண்பர் ஆவணப்படங்களுக்கும் தணிக்கை வாரியம் அமைக்க வேண்டும் – நிர்பயா நண்பர்

1 minutes read

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் மிகவும் போலியானது எனவும் ஆவணப்படங்களையும் சென்சார் செய்ய வேண்டும் எனவும் மாணவியின் நண்பர் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நண்பருடன் பஸ்சில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் வீசப்பட்டார். இதனை தடுக்க முயன்ற அவரது நண்பர் அவனிந்த்ர பாண்டேயும் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் நிர்பயா மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு பிபிசி பெண் செய்தியாளர் லெஸ்லி உத்வின் எடுத்த இந்தியாவின் மகள் ஆவணப்படம் மற்றும் குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி வெளியாகி நாடு முழுவதும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த படத்தை இந்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் இந்த படம் மிகவும் அப்பட்டமான பொய்யான தகவல்களால் செய்யப்பட்டுள்ளது என்று நிர்பயாவின் நண்பரும், குற்றவாளிகளால் தாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவருமான அவனிந்த்ர பாண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த படம் முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது. இதில் பாதிக்கப்பட்டவரின் குரல் மறைக்கப்பட்டுவிட்டது. உண்மைகளும், மைய விஷயங்களும் மறைக்கப்பட்டு விட்டன. அந்த கொடிய இரவில் நடந்தது என்ன என்று எனக்கும், நிர்பயாவுக்கும் மட்டுமே தெரியும்.  உண்மைகளில் இருந்து வெகுதொலைவில் உள்ளது இந்த ஆவணப்படம். இந்த படத்தில் வரும் ஆசிரியர் ஒருவர் நான் ஆக்ஷன் படம் பார்க்க விரும்பியதாக கூறியுள்ளார். அவர் யார்? சம்பவம் நடந்தபோது அவர் எங்கிருந்தார்? நான் என்ன படம் அப்போது பார்க்க விரும்பினேன் என்பது அவருக்கு எப்படி தெரியும்? சம்பவங்கள் தொடர்பாக நான் எந்த விஷயத்தையும் வெளியே கூற முடியாத பாதிக்கப்பட்ட மனநிலை யில் இருந்தேன். உடல் நலம் காரணமாகவும் நான் ஆவணப்படத்திற்கு பேட்டி அளிக்கவில்லை. இந்த ஆவணப்படம் நாட்டின் கவுரவத்தை குலைப்பது போல் உள்ளது. மத்திய சிறைச்சாலைக்குள் யார் வேண்டுமானாலும் வந்து குற்றவாளிகளை பேட்டி எடுக்கலாம் என்பது போல் இந்த படம் காட்டுகிறது. இதனால் நாட்டின் ஒட்டு மொத்த சட்டம் ஒழுங்கே கேள்விக்கு உள்ளாகியுள்ளது. என்னை பொறுத்த அளவில் ஆவணப்படங்களுக்கும் தணிக்கை வாரியம் அமைக்க வேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.