கேலி சித்திரம் வரைந்து சர்ச்சையில் சிக்கிய கார்ட்டூனிஸ்டுக்கு விருது வழங்கப்பட்டது.
சுவீடனை சேர்ந்த கார்ட்டூனிஸ்டு லார்ஸ் வில்க்ஸ், இவர் பிரபலங்களை கேலி சித்திரம் வரைந்து பிரபலம் ஆனவர். சமீபத்தில் இவர் வரைந்து சர்ச்சைக்குரிய கார்ட்டூன் டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகனில் இருந்து வெளிவரும் பத்திரிகையில் வெளியானது.
இதனால் ஆத்திரம் அடைந்த நபர் கடந்த மாதம் கோபன்ஹேகனில் ஓட்டலில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார். அதில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியாகினர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கார்ட்டூனிஸ்டு லார்ஸ் வில்க்ஸ்சுக்கு டென்மார்க் அரசு விருது வழங்கி கவுரவித்தது. அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி டென்மார்க் பாராளுமன்ற வளாகத்தில் நடந்தது.
அதனால் பாராளுமன்றத்தை சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் துப்பாக்கி சூடு நடந்த ஓட்டல் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் அமைதி வளையம் ஏற்படுத்தி கொல்லப்பட்ட போலீஸ் காரருக்கு அஞ்சலி செலுத்தினர்.