நெதர்லாந்தில் இருந்து கடத்தி தனது குழந்தைகளை ஒரு தாய் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தார்.
ரஷியாவில் உள்ள செசன்யா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் நெதர்லாந்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்தார். அவர்களுக்கு 7 மற்றும் 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் நெதர்லாந்தில் மாஸ்ட் ரிச் நகரில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நெதர்லாந்துகாரர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
அதை தொடர்ந்து அந்த பெண் தனது 2 பெண் குழந்தைகளை கிரீஸ் நாட்டுக்கு விமானம் மூலம் கடத்தி சென்றார். பின்னர் அங்கிருந்து பல ஐரோப்பிய நாடுகளை கடந்து சிரியாவின் ரக்கா நகரம் சென்றார்.
அங்கு தனது குழந்தைகளை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தார். இந்த தகவலை நெதர்லாந்து அரசு உறுதி செய்துள்ளது. நெதர்லாந்தில் இருந்து வெளியேறிய 12–க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் சிரியா மற்றும் ஈராக் சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.