செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான இடைக்காலத் தேர்தல் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான இடைக்காலத் தேர்தல்

இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான இடைக்காலத் தேர்தல் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான இடைக்காலத் தேர்தல்

1 minutes read

இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, தொடர்ந்து 6 ஆண்டுகளாகப் பிரதமர் பதவி வகித்து வருகிறார். தற்போதைய அவரது பதவிக் காலம் முடிவதற்கு சுமார் 3 ஆண்டுகள் இருக்கும்போதே, இடைக்காலத் தேர்தலை அறிவித்தார்.

இந்தத் தேர்தலில் 25 கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆனால் இவற்றில் 11 கட்சிகள் மட்டுமே குறிப்பிடத் தக்க வாக்குகளைப் பெற்று, 120 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் இடம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேலில் சுமார் 58.8 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் காலையில் 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. பிரதமர் நெதன்யாஹு தலைநகர் ஜெருசலேமில் வாக்களித்தார்.

அந்நாட்டில் எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதில்லை. விகிதாசார அடிப்படையில் 3.25% வாக்குகள் பெற்ற கட்சி நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களை நியமிக்கும். 3.25% என்பது 4 உறுப்பினர்களை நியமிக்க உதவும்.

வலதுசாரி லிக்குட் கட்சியைச் சேர்ந்த நெதன்யாஹு பிற வலதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றலாம் எனத் திட்டமிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக மார்ச் 25-ஆம் தேதி அந்நாட்டு அதிபரிடம் அளிக்கப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.