செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நெதன்யாகு | இஸ்ரேல் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்கிறார்நெதன்யாகு | இஸ்ரேல் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்கிறார்

நெதன்யாகு | இஸ்ரேல் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்கிறார்நெதன்யாகு | இஸ்ரேல் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்கிறார்

1 minutes read

இஸ்ரேல் பார்லிமென்ட் தேர்தலில், பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி, பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, நெதன்யாகு, இஸ்ரேல் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்கிறார்.

இஸ்ரேல் பார்லிமென்ட் தேர்தல், செவ்வாய் கிழமையன்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள், நேற்று எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள, 120 இடங்களில், நெதன்யாகுவின், லிக்யுட் கட்சி, 29 இடங்களை கைப்பற்றியது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில், லிக்யுட் கட்சியை விட, நான்கு அல்லது ஐந்து இடங்களை, முக்கிய எதிர்க்கட்சியான, மத்திய இடதுசாரி சியோனிஸ்ட் கூட்டமைப்பு பெற்று, ஆட்சி அமைக்கும் என, தகவல் வெளியானது. ஆனால், அதற்கு நேர்மாறாக, 24 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளதால், அக்கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. லிக்யுட் கட்சி, அதிக இடங்களை கைப்பற்றியுள்ள போதிலும், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இஸ்ரேல் பிரதமராக உள்ள நெதன்யாகு, நான்காவது முறையாக ஆட்சி அமைப்பது குறித்து, சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை துவக்கி விட்டார்.

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை; பாலஸ்தீனிய உடன்பாட்டில், சிறிதும் சமரசத்திற்கு இடமில்லை என்பது போன்ற நெத்தியடி பிரசாரம் தான், நெதன்யாகுவின் வெற்றிக்கு காரணம் என, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் வெற்றி குறித்து உரையாற்றிய நெதன்யாகு, ”புதிய அரசு ஸ்திரமாகவும், நாட்டின் பாதுகாப்பு, சமூக பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட அம்சங்களில் விரைவாகவும் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்,” என்று தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.