செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்க அதிபர் ஒபாமா | ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீடிக்கும்அமெரிக்க அதிபர் ஒபாமா | ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீடிக்கும்

அமெரிக்க அதிபர் ஒபாமா | ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீடிக்கும்அமெரிக்க அதிபர் ஒபாமா | ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீடிக்கும்

1 minutes read

ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் ஆகியோர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

உக்ரைன் அமைதி குறித்து, பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்கில் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை, ரஷியா மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகள் நீடிக்கும்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெலும் தொலைபேசி வழியாக புதன்கிழமை பேச்சு நடத்தினர்.

அப்போது, பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, அனைத்து ஆயுதங்களையும் எல்லைப்புறத்திலிருந்து நீக்குவது உள்ளிட்ட நிபந்தனைகளை ரஷிய நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அரசியல் ரீதியான பேச்சு நடத்தி, சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்து, நீடித்த அமைதி நிலவச் செய்ய வேண்டும் என்று இது தலைவர்களும் வலியுறுத்தினர் என்று அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சிப் படையினர், அந்நாட்டு ராணுவத்துடன் கடந்த ஆண்டு முதல் சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.

கிளர்ச்சிப் படையினருக்கு ரஷியா ஆயுத உதவி அளித்து வருகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

ரஷிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக வசிக்கும் கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை, கிளர்ச்சியாளர்கள் தங்களது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இதையடுத்து, அந்தப் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்தி, தங்களது பகுதிகள் உக்ரைனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.