இங்கிலாந்து நாட்டின் பழமையான ராயல் சொசைட்டியின் தலைவராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்தவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்,கடந்த 1999-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் குடியேறி வசித்து வருகிறார். முன்னதாக இவர் கடந்த 2009-ம் ஆண்டு ரைபோசோம் எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான வேதியியல் ஆய்விற்காக நோபல் பரிசு பெற்றுள்ளார். தற்போது இவர் கேம்பி்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ராயல் சொசைட்டியின் கூட்டம் நடைபெற்றது. அதில் நடைபெற்ற ஓட்டெடுப்பு மூலமாக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த பதவியை பெறும் முதல் இந்திய விஞ்ஞானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.