செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவில் விமானப்படைச் சிப்பாய் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவில் விமானப்படைச் சிப்பாய் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு!

1 minutes read

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தில் கடமையாற்றும் விமானப்படைச் சிப்பாய் ஒருவர் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றிரவு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குருநாகல் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சிப்பாயே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மரண விசாரணை அறிக்கை பெறப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் இதுவரை 16 படையினரின் (இராணுவம், கடற்படை, விமானப்படை) சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 13 சடலங்கள் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன,

16 சடலங்களில் 11 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்றும், 2 பேர் சக சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 3 பேர் திடீர் சுகயீனம் காரணமாக இறந்துள்ளனர் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.