பருவப் பெயர்ச்சி மழையால் ஏற்படும் இடர்களை எதிர்கொள்ளும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 154 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட இடர் முகாமைத்து உதவிப் பணிப்பாளர் சி.லிங்கேஸ்வரகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“முல்லைத்தீவு மாவட்டத்தில் 154 இடைத்தங்கல் முகாம்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 35 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இயற்கை இடர் ஏற்படுடம் பட்சத்தில் மக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” – என்றார்.