செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி சிக்கினார்

மட்டக்களப்பில் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி சிக்கினார்

0 minutes read

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி (வயது 28) கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு அரபா நகரில் வைத்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டார்

காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கதிரவெளி விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருளை விற்பனைக்குக் கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்த ஒரு தொகைப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் நீண்டகாலமாக மிகவும் சூட்சுமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் கொழும்பிலிருந்து மொத்தமாக ஐஸ் போதைப்பொருளைக் கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இவரைப் பல்வேறு தடவைகளில் கைது செய்ய முயற்சித்தும் சாதுர்யமாகத் தப்பித்து வந்த நிலையிலேயே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், மேலதிக விசாரணைக்காக வாழைச்சேனைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.