யாழ்ப்பாணம், கோப்பாய், கைதடி வீதியில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மரநடுகையில் ஈடுபடும் பொருட்டு சிரமதானப் பணியில் ஈடுபடும் போது மர்மப்பொருள் வெடித்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது தனியார் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்தப் பகுதியில் புல்லு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இன்று வழமை போல் நாங்கள் மரம் நடுவதற்காகப் புல்லு வெட்டிக் கொண்டிருந்த போது திடீரென மர்மப்பொருள் வெடித்தது” – என்று தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ஆராய்ந்து வருகின்றனர்.