செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாகிஸ்தான் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் 8வது இடம்பாகிஸ்தான் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் 8வது இடம்

பாகிஸ்தான் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் 8வது இடம்பாகிஸ்தான் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் 8வது இடம்

1 minutes read

உலகிலேயே மிகவும் அபாயகரமான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 8வது இடம்பிடித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஈராக் முதலிடத்தை பிடித்துள்ளது. தீவிரவாதம், கிளர்ச்சி உள்ளிட்டவை அதிகம் நடக்கும் அபாயகரமான 10 நாடுகள் குறித்த ஆய்வை வாஷிங்டனை சேர்ந்த புலனாய்வு அமைப்பு ஒன்று நடத்தியது. அபாயகரமான நாடுகளின் பட்டியலில் ஈராக், சிரியா, நைஜீரியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளதாகவும், பாகிஸ்தான் 8வது இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத செயல்கள், உள்நாட்டு போர், கலவரம், உயிரிழப்பு போன்றவற்றின் அடிப்படையில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. சோமாலியா, லிபியா, ஏமன், உக்ரைன், எகிப்து ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அபாயகரமான நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு அவர்கள் நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.

ஏமன் நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சி படைக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே தற்போது கடும் சண்டை நடந்து வருகிறது. ஏமனுக்கு ஆதரவாக சவுதி அரேபியா போரிட்டு வருகிறது. நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. உக்ரைனில் உள்நாட்டு போரால் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். ரஷ்யா ஆதரவுடன் அந்நாட்டு ராணுவத்துடன் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரை தலிபான் அமைப்பினரால் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. பெஷாவரில் உள்ள பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 135க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற தற்கொலை படை தாக்குதல் சம்பவங்கள் பாகிஸ்தானில் அவ்வப்பொழுது நடந்து வருகின்றன. பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, தீவிரவாத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீவிரவாத தடுப்பு சட்டங்களை மாற்றியமைத்தது. மரண தண்டனைக்கான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றி வருகிறது. அந்தவகையில் நேற்று 4 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.