செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஏமனில் இருந்து இந்தியர் மீட்பு தொடர்கிறது ஏமனில் இருந்து இந்தியர் மீட்பு தொடர்கிறது

ஏமனில் இருந்து இந்தியர் மீட்பு தொடர்கிறது ஏமனில் இருந்து இந்தியர் மீட்பு தொடர்கிறது

1 minutes read

 ஏமன் நாட்டின் நகரங்களிலிருந்து, நேற்று மட்டும், 670 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில், பயங்கர போர் நடைபெற்று வருவதால், அங்கு பணியாற்றச் சென்ற இந்தியர்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த நடவடிக்கையில், நேற்று நள்ளிரவு நிலவரப்படி 2,300 பேர் இந்திய விமானப்படை விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம், ஏமன் நாட்டின் நகரங்களில் இருந்து மீட்கப்பட்டு, இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்று மட்டும், 670 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில், 488 பேர், சனா நகரிலிருந்து, மூன்று இந்திய விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக நடைபெறும் மீட்பு நடவடிக்கையில் நேற்றைய நடவடிக்கையில், தான் அதிகமானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டனர். இதில் குறிப்பிடத்தக்க மனிதாபிமான நடவடிக்கையாக, இந்திய கடற்படை கப்பலில், மூன்று பாகிஸ்தானியர்கள், ஏமன் நகரம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு, பத்திரமாக பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்பட்டனர். அது போல, மற்றொரு நகரம் ஒன்றில், இந்தியாவைச் சேர்ந்த, 11 பேரை, பாகிஸ்தான் கடற்படையினர் மீட்டுள்ளனர். இருநாடுகளுக்கும் இடையேயான உறவு நன்றாக இல்லாத நிலையிலும், இரு நாடுகளின் அப்பாவி மக்கள், மனிதாபிமான அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளதை பலரும் பாராட்டினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.