செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கனடா வான்வழித் தாக்குதலை சிரியாவில் தொடங்கியதுகனடா வான்வழித் தாக்குதலை சிரியாவில் தொடங்கியது

கனடா வான்வழித் தாக்குதலை சிரியாவில் தொடங்கியதுகனடா வான்வழித் தாக்குதலை சிரியாவில் தொடங்கியது

0 minutes read

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது முதல் முறையாக வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியதாக கனடா நாட்டு ராணுவம் தெரிவித்தது.

இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராகத் தாக்குதல் நிகழ்த்தி வரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையில் கனடாவும் அங்கம் வகிக்கிறது. இதுவரை கூட்டுப் படையினருடன் இணைந்து இராக்கில் மட்டுமே கனடா வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில், சிரியாவிலும் தாக்குதல் நிகழ்த்த கனடா ராணுவத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. அதையடுத்து, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தனது தாக்குதல் நடவடிக்கையை சிரியாவுக்கும் கனடா விரிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்கக் கூட்டுப் படைகள் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வரும் நிலையிலும், இராக், சிரியா நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கணிசமான பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.