2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் போட்டியிடப்போவதாக அவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன், இவரது மனைவி ஹிலாரி கிளின்டன், கடந்த 2009-2013-ம் ஆண்டுகளில் ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.
இந்நிலையில் வரும் 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகவும் நாளை (ஞாயிறு)முறைப்படி அறிவிக்க உள்ளதாக ஹிலாரியின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.