சீனாவில் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் தீப்பிடித்ததில் 6.77 லட்சம் சீன யுவான்கள் (சுமார் ரூ.68.34 லட்சம்) மதிப்பிலான கரன்சி நோட்டுகள் எரிந்து நாசமாகின.
அந்த நாட்டின் நான்னிங், கின்ஷாவ் ஆகிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் அந்த வாகனம் புதன்கிழமை சென்று கொண்டிருக்கையில் இந்த விபத்து ஏற்பட்டது.
பல்வேறு பெட்ரோல் விற்பனையகங்கள், சுங்கச் சாவடிகள் ஆகியவற்றில் வசூலிக்கப்பட்ட தொகை அந்த வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
தீயுடன் போராடி, அரைகுறையாக எரிந்த நிலையில் 3 லட்சம் யுவான்களை (சுமார் ரூ.30 லட்சம்) மட்டுமே அதிகாரிகளால் மீட்க முடிந்தது.