செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இடைக்கால அறிக்கையை சிறிசேனா அரசிடம் சமர்ப்பித்தது | இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை இடைக்கால அறிக்கையை சிறிசேனா அரசிடம் சமர்ப்பித்தது | இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை

இடைக்கால அறிக்கையை சிறிசேனா அரசிடம் சமர்ப்பித்தது | இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை இடைக்கால அறிக்கையை சிறிசேனா அரசிடம் சமர்ப்பித்தது | இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை

0 minutes read

இலங்கை இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்களின் உறவினர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய ராஜபக்சே அரசால், 3 நபர் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரணகமா தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவினர், கடந்த 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை தொடங்கினர்.

இந்த குழுவினரிடம், காணாமல் போனவர்கள் குறித்து 16 ஆயிரத்து 153 புகார்கள் வந்தன. இதில் 5 ஆயிரத்து 200 புகார்கள், பாதுகாப்பு வீரர்கள் மாயமானது குறித்தது ஆகும். இந்த புகார்கள் தொடர்பாக சுமார் 1440 புகார்தாரர்களிடம் இருந்து வாய்வழி சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த குழு தனது இடைக்கால அறிக்கையை சிறிசேனா அரசிடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.