செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நிலநடுக்கம் பனிச்சரிவில் சிக்கி ‘கூகுள்’ இன்ஜினியர் பலிநிலநடுக்கம் பனிச்சரிவில் சிக்கி ‘கூகுள்’ இன்ஜினியர் பலி

நிலநடுக்கம் பனிச்சரிவில் சிக்கி ‘கூகுள்’ இன்ஜினியர் பலிநிலநடுக்கம் பனிச்சரிவில் சிக்கி ‘கூகுள்’ இன்ஜினியர் பலி

1 minutes read

பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான, ‘கூகுள்’ நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர் டேன் பிராடின்பர்க். இவர், பிரபலமான மலையேற்ற வீரரும் கூட. கூகுள் நிறுவனத்தின், ‘மேப்ஸ் சர்வீஸ்’ என, அழைக்கப்படும் இணைய வரைபடம் தொடர்பான, ‘ஸ்ட்ரீட் வியூ புராஜெக்ட்’ என்ற திட்டத்துக்காக, இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்துக்கு, தன் குழுவினருடன் சென்றிருந்தார்.

இமயமலையின் அடிவாரத்தில் தங்கியிருந்தபோது, திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, டேன் தங்கியிருந்த இடத்தில் பனிச் சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தார். இவர், தன்னை, ‘கூகுள் சாகசக்காரன்’ என, எப்போதும் பெருமையுடன் கூறுவது வழக்கம். இதுகுறித்து, கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘எங்களில் ஒருவரை இழந்து விட்டோம். அவருடன் சென்ற, மற்ற மூன்று பேரும் பாதுகாப்பாக உள்ளனர்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2007ல் இருந்து, கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் டேன் பிராடின்பர்க், தானியங்கி கார், பலூன் மூலம் அதிவேக இணைய சேவை வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்காக, அந்த நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியவர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.