அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக அந்நாட்டின் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், இதைத்தொடர்ந்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்க தொலைக்காட்சியான சி.என்.என். கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டது.
அமெரிக்காவின் சட்ட அமலாக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை சி.என்.என். வெளியிட்டு இருந்தது. ஆனால் இதை லாஸ்ஏஞ்சல்ஸ் நகர சட்ட அமலாக்க பிரிவு உயர் அதிகாரி ஒருவர் மறுத்தார். இதுபற்றி அந்த அதிகாரி கூறுகையில், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலோ அல்லது எங்களது எல்லைக்கு உட்பட்ட எந்த விமான நிலையத்திலோ ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக எந்த அச்சுறுத்தலும் எங்களுக்கு வரவில்லை என்றார்.
இது குறித்து கலிபோர்னியா மாகாண பாதுகாப்பு இலாகா செய்தி தொடர்பாளர் பீட்டர் போகார்டிடம் கேட்டபோது குறிப்பிட்ட புலனாய்வு தகவல் குறித்து அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.