0
சென்னையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் வக்கீல், நியூயார்க்கில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். 43 வயதான ராஜராஜேஸ்வரி, இளமைக்காலத்திலேயே அமெரிக்கா சென்று குடியேறனார். சட்டம் படித்த இவர், அமெரிக்காவின் சட்டத்துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தார். தற்போது நீதிபதியாகி உள்ளார். கடந்த 27ம் தேதி நியூயார்க் சிட்டி ஹாலில் நடந்த விழாவில், நகரின் மேயர் பில் டி பிலாசியோ, ராஜராஜேஸ்வரிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.