போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகிய இருவருக்கும் இன்று அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்தோனேசியாவுக்கான தங்கள் நாட்டு தூதரை ஆஸ்திரேலியா திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.
தங்கள் நாட்டை சேர்ந்த மயூரன் மற்றும் சான் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று ஆஸ்திரேலியா பலமுறை வலியுறுத்திய போதும், சிறிதும் செவி கொடுக்காத இந்தோனேஷியா இன்று அதிகாலை இருவரின் மரண தண்டனையை நிறைவேற்றியது. இதனால் இந்தோனேசியாவுக்கான தனது நாட்டு தூதரை ஆஸ்திரேலியா திரும்புமாறு
பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளார்.
இது குறித்து அப்பாட் கூறுகையில், இந்தோனேசியாவின் இறையாண்மையை நாங்கள் மதிக்கின்றோம். எனினும் நடைபெற்றிருப்பது சாதாரணமாக விஷயமல்ல. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று கூறினார்.