0
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தபடுவதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலை அடுத்து புத்தளம் பகுதியில் பொலிஸ் , புலனாய்வுத்துறையினர் எடுத்த கடும் முயற்சியால் 2 கோடி பெறுமதியான போதை பொருள் சிக்கியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
புத்தளம் கடற்கரை சார்ந்த பகுதியிலேயே இந்த போதை பொருட்கள் சிக்கியுள்ளது.இது தொடர்பில் இருவர் கைது செய்யபட்டுள்ளதுடன் அதில் ஒருவர் பெரியளவில் போதை பொருள் கடத்தல் மன்னன் என தெரிய வந்துள்ளது.