பிரதமர் மோடிக்கு அருகில் வந்த சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவன் மோடிக்கு அருகில் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தாலும் இது பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோடி அவர்கள் கர்நாடக மாநிலத்தில் பல புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வந்த போதே இவ்வாறு நடைபெற்றுள்ளது.
15 வயது நிரம்பிய சிறுவன் மோடிக்கு வழங்கப்பட்ட அதீத பாதுகாப்பை மீறி எவ்வாறு அருகில் வந்தான் என்று அனைவரின் கேள்வியாக உள்ளது.
இது தொடர்பில் தெரியவருவது , சிறுவன் கையில் ஒரு மாலையுடன் வீதியில் இருந்து குதித்து வந்துள்ளான் மோடி அருகில் வந்தவுடன் சிறப்பு பாதுகாப்பு படை அவனை தடுத்து வீதிக்கு வெளியில் கொண்டு சென்றுள்ளது பின் மோடி அவனின் கையில் இருந்த மாலையை பாதுகாப்பு படையினர் பரிசீலனை செய்ததும் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வு இந்தியாவின் பழம் பெரும் தலைவர்கள் இது போன்ற சூழலில் மரணத்தை தழுவினார் என்பதை அனைவருக்கும் சிறுது நினைவு படுத்தியிருக்கும் .