நேபாளத்தில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1.60 லட்சம் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன என்று ஐ.நா.வின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதை நேபாள அரசும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டக் கூடும் எனக் கூறப்படுகிறது.
நேபாளத்தில் 1934-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பைவிட, தற்போதைய பாதிப்பு இரு மடங்கு அதிகமாகும்.
கோர்க்கா, சிந்துபால்செüக் ஆகிய பகுதிகள் மிக அதிகபட்ச அழிவைச் சந்தித்துள்ளன. இங்கு 90 சதவீத வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேபாள அரசு மே 1-ஆம் தேதி வெளியிட்ட கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் 1,60,786 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. மேலும், 1,43,642 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும், 1,383 பள்ளிகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், நேபாள அரசு தற்போது நடத்தி வரும் கணக்கெடுப்பின்படி, தரைமட்டமான வீடுகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டக் கூடும் என்று கூறப்படுகிறது.
உயிரிழப்பு அதிகரிப்பு: இதனிடையே, நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7,271 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,267-ஆக உள்ளது.
நேபாளத்தில் பலியானோரில் 38 இந்தியர்கள் உள்பட 54 வெளிநாட்டவர்களும் அடங்குவர். மேலும், 82 பேரைக் காணவில்லை.