செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நேபாள அரசு அதிரடி உத்தரவு | நிலநடுக்க மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் 33 வெளிநாட்டுக் குழுக்கள் வெளியேற வேண்டும்நேபாள அரசு அதிரடி உத்தரவு | நிலநடுக்க மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் 33 வெளிநாட்டுக் குழுக்கள் வெளியேற வேண்டும்

நேபாள அரசு அதிரடி உத்தரவு | நிலநடுக்க மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் 33 வெளிநாட்டுக் குழுக்கள் வெளியேற வேண்டும்நேபாள அரசு அதிரடி உத்தரவு | நிலநடுக்க மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் 33 வெளிநாட்டுக் குழுக்கள் வெளியேற வேண்டும்

2 minutes read

நேபாளத்தில் நிலநடுக்க மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் 33 வெளிநாட்டுக் குழுக்களையும் வெளியேறுமாறு நேபாள அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,365ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி விட்டன.
நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயுள்ள நேபாளத்துக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. நிலநடுக்கம் குறித்த தகவல் வெளியானதும் முதல் நாடாக இந்தியாவின் தேசியப் பேரிடர் மீட்புப் படை நேபாளம் விரைந்தது. கடந்த ஒரு வாரமாக அந்நாட்டில் தங்கி தீவிரமாக மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மீட்புக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 4,500 ஊழியர்கள் அங்கு தீவிரமாக மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
நேபாளத்தில் பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளை அளித்துவந்தபோதிலும், இந்தியா சார்பில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள் சர்வதேச அளவில் கவனத்தைக் கவர்ந்தன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவைப் பாராட்டின. மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை இந்திய ஊடகங்கள் மிகவும் புகழ்ந்து பாராட்டி செய்திகளை வெளியிட்டன. இது நேபாள எதிர்க்கட்சிகளையும், அந்நாட்டு மக்களையும் எரிச்சலடையச் செய்தது.
இதுதொடர்பாக நேபாள வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிலநடுக்க பாதிப்புகளைப் பொருத்தவரை, தற்போது மீட்பு நடவடிக்கைகளைவிட நிவாரண நடவடிக்கைகளிலேயே முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, தங்களின் முதல்கட்ட மீட்புக் குழுக்கள் அனைத்தையும் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு 34 நாடுகளிடமும் நேபாள அரசு கூறியுள்ளது. தற்போது இடிபாடுகளை அகற்றும் சாதனங்களே தேவைப்படுகின்றன. இது தொடர்பாக இந்தியாவிடம் உதவி கோரியுள்ளோம். அவற்றைப் பெறுவதற்காக ராணுவப் பொறியியல் குழு அந்நாட்டுக்குச் செல்லும் என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்: முன்னதாக, வெளிநாட்டு மீட்புக் குழுக்களிடம் வெளியேறுமாறு கூற வேண்டும் என்று நேபாள இயற்கைச் சீற்ற நிவாரணக் குழு ஞாயிற்றுக்கிழமை அளித்த பரிந்துரையை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. இது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரியான லட்சுமி பிரசாத் தக்கால் கூறியதாவது:
நிலநடுக்கம் ஏற்பட்டு 8 தினங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. மீட்புக் குழுக்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டன. நாங்கள் அவற்றுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். சர்வதேச தேடுதல் மற்றும் மீட்புக் குழு வகுத்த நெறிமுறைகளின்படி தேடுதல், மீட்பு நடவடிக்கைகள் 7 தினங்களுக்கே மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே அந்தக் காலகட்டம் முடிவடைந்துவிட்டதால், இனி மீதமுள்ள மீட்புப் பணிகளை நேபாள ராணுவமும், உள்ளூர் காவல் துறையும் மேற்கொள்ளும் என்றார் அவர்.
வெளியேறும் மீட்புக் குழுக்கள்: நேபாள அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, ஜப்பான், துருக்கி, உக்ரைன், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் காத்மாண்டில் இருந்து வெளியேரும் நடைமுறைகளைத் தொடங்கியுள்ளன.
நேபாளத்தின் மொத்த மக்கள்தொகை 2.8 கோடியாகும். இவர்களில் 80 லட்சம் பேர் நிலநடுக்கத்தால் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு உத்தரவு காரணமாக வெளிநாட்டு உதவிக் குழுக்களும் படிப்படியாக வெளியேறிவிடும் என்பதால், இனி மேற்கொள்ள வேண்டிய மறுவாழ்வுப் பணிகள் நேபாளத்துக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நேபாள நிலநடுக்கத்தால் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளதாகவும், உயிரிழந்த வெளிநாட்டினரின் மொத்த எண்ணிக்கை 57 என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்தியாவின் இளம் மலையேற்ற வீரரான அர்ஜுன் வாஜ்பாய் உள்ளிட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, நிலநடுக்கத்தால் மலையேற்ற வீரர்கள், கிராமவாசிகள் ஆகியோரின் 100 உடல்கள் பனிப்பாறைச் சரிவில் புதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிவாரணம், மீட்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு நேபாள அரசிடம் இருந்து எங்களுக்கு கோரிக்கை வந்ததைத் தொடர்ந்து, நமது ஊழியர்களை படிப்படியாக இந்தியாவுக்கு திருப்பியனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளோம். முதல் கட்டமாக மூன்று குழுவினர் சாலை வழியாக பாட்னா புறப்படுவார்கள்.
மற்றவர்கள் விமானம் மூலமாகவோ, சாலை வழியாகவோ அடுத்த சில தினங்களில் இந்தியா திரும்புவார்கள்.
இந்தியக் குழுவினர் தங்களால் இயன்ற அளவுக்கு பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவ முயன்றனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளார்களா என்று தேடும் பணிகள் முடிவுக்கு வந்துவிட்டன. இதுவே, வெளிநாட்டு மீட்புப் படைகளை வெளியேறுமாறு நேபாள அரசு கேட்டுக் கொண்டதற்கான காரணமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.