செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்க மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல்அமெரிக்க மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல்

அமெரிக்க மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல்அமெரிக்க மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல்

1 minutes read

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் கார்லேண்டு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முஹம்மது நபியை கார்ட்டூனாக வரையும் பிரமாண்ட போட்டி நடந்தது. அதில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் கார்ட்டூனுக்கு ரூ.6 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து.

இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது போட்டி நடைபெற்ற கர்டிஸ் கல்வெல் மையம் முன்பு துப்பாக்கி ஏந்திய 2 மர்ம மனிதர்கள் வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு கூடியிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை நோக்கி பதிலுக்கு சுட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல் நடத்தவந்த 2 மர்ம நபர்களும் கொல்லப்பட்டனர். இதில் ஒரு பாதுகாப்பு படை வீரருக்கும் காயம் ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை தொடர்ந்து கார்ட்டூன் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என கருதிய அமெரிக்க போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் தற்போது பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக, இந்த இயக்கத்தின் அதிகாரபூர்வ வானொலியில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘முஹம்மது நபியைப்பற்றி தவறான கண்ணோட்டத்தில் படம் வரையும் போட்டியை நடத்திய கண்காட்சி திடலில் எங்கள் இயக்கத்தை சேர்ந்த இரு வீரர்கள்தான் தாக்குதல் நடத்தினர். இதற்கு அடுத்தடுத்த தாக்குதல்கள் மேலும் பெரியதாகவும், கசப்பூட்டும் வகையிலும் இருக்கும்.

ஐ.எஸ். படையினர் கொடூரமான காரியங்களை செய்வதை நீங்கள் காண்பீர்கள் என நாங்கள் அமெரிக்காவுக்கு  தெரிவித்துக்கொள்கிறோம்’ என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க மண்ணில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய முதல் தாக்குதல் இது, என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.