செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுடன் முன்னாள் அதிபர் ராஜபட்ச சந்திப்புஅதிபர் மைத்ரிபால சிறீசேனாவுடன் முன்னாள் அதிபர் ராஜபட்ச சந்திப்பு

அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுடன் முன்னாள் அதிபர் ராஜபட்ச சந்திப்புஅதிபர் மைத்ரிபால சிறீசேனாவுடன் முன்னாள் அதிபர் ராஜபட்ச சந்திப்பு

1 minutes read

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவை, அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபட்ச புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் களைவது குறித்தும், ராஜபட்ச மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபட்ச தலைமையிலான முந்தைய ஆட்சியில், அமைச்சராக இருந்த சிறீசேனா, கடந்த ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, ராஜபட்ச மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்புவது குறித்தும், சுதந்திரா கட்சியின் எதிர்காலம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ராஜபட்ச மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவது குறித்து சாதகமான பதில் எதையும் சிறீசேனா தெரிவிக்கவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து ராஜபட்சவின் செய்தித் தொடர்பாளர் டல்லாஸ் அழகப்பெருமா கூறுகையில், “எங்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட 5 விவகாரங்களுக்கு அதிபர் சிறீசேனாவிடமிருந்து திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை’ என்றார். அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து, சுதந்திரா கட்சியின் தலைவர் பதவியை ராஜபட்ச ராஜிநாமா செய்தார். இதையடுத்து, கட்சியின் புதிய தலைவராக சிறீசேனா பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் எனத் தெரிகிறது. இதில், ராஜபட்சவை பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.