செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விண்கலம் எரிந்து நாளை பூமியில் விழுகிறது விண்கலம் எரிந்து நாளை பூமியில் விழுகிறது

விண்கலம் எரிந்து நாளை பூமியில் விழுகிறது விண்கலம் எரிந்து நாளை பூமியில் விழுகிறது

1 minutes read

சர்வதேச விண்வெளி ஆய்வகம் சென்ற ரஷியா விண்கலம் எரிந்தது. அது நாளை பூமியில் விழுகிறது. பூமியில் இருந்து 420 கி.மீட்டர் உயரத்தில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து இந்த ஆய்வகத்தை உருவாக்குகின்றனர்.

அங்கு தங்கி பணிபுரியும் வீரர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், குடிநீர், உடை, எரிபொருள், ஆக்சிஜன், மற்றும் உபகரணங்கள் ரஷியாவின் ‘‘திபுரோகிரவ் எம்.27 எம்’’ என்ற ஆளில்லா விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (28–ந்தேதி) கஜகஸ்தானில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அது வழி மாறி சென்று விட்டது. அதனால் தரைகட்டுப்பாட்டு நிலையத்துடன் ஆன தகவல் தொடர்பை இழந்து விட்டது.

எனவே, வழி மாறி சென்ற அந்த விண்கலம் செயல்பாடு இழந்து எரிந்து விட்டதாக விண்வெளி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த விண்கலத்தின் சிறிய அளவிலான இடிபாடுகள் மட்டும் பூமியில் வந்து விழும் என தெரிகிறது. அது நாளை (8–ந்தேதி) கிழக்கு அமெரிக்கா, கொலம்பியா, பிரேசில் அல்லது இந்தோனேசியா கடலில் விழும் என ரஷிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அது பூமியில் நிலப்பரப்பில் விழாது என்றும் உறுதிபட கூறியுள்ளனர்.

இதற்கிடையே புரோகிரஸ் விண்கலம் செயல்பாடு இழந்தது குறித்து சிறப்பு கமிஷன் விசாரணைக்கு ரஷியா உத்தரவிட்டுள்ளது. தற்போது விண்கலம் எரிந்ததின் மூலம் ரூ.330 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011–ம் ஆண்டும் இதே போன்று ஒரு விண்கலம் எரிந்தது. அதை தொடர்ந்து அது சைபீரியாவில் விழுந்து நொறுங்கியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.