செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி இலங்கை விஜயம்!

அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி இலங்கை விஜயம்!

0 minutes read

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்கக் கூட்டுறவின் பரந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நேபாளத்தின் புதிய அரசுடன் செயற்பாடுகளில் ஈடுபடுவார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அவர், அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்குத் தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை உறுதி செய்வார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
…….

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.