செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதிர்ச்சி தரும் தகவல் 2014ல் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் மக்கள் அகதிகளாகினர் அதிர்ச்சி தரும் தகவல் 2014ல் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் மக்கள் அகதிகளாகினர்

அதிர்ச்சி தரும் தகவல் 2014ல் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் மக்கள் அகதிகளாகினர் அதிர்ச்சி தரும் தகவல் 2014ல் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் மக்கள் அகதிகளாகினர்

0 minutes read

போர் மற்றும் கலவரம் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

நார்வே அகதிகள் சபையின் செயலாளர் ஜான் இக்லாண்ட் இது பற்றி கூறும் போது “இந்த தலைமுறையில் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஒரே ஆண்டில் அதிகபட்ச மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். உள்நாட்டிற்குள்ளாகவே இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை 11 மில்லியனில் இருந்து 38 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு சராசரியாக ஒவ்வொரு நாளும் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 30 ஆயிரம் பேர் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி தங்கள் நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இதில் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.