பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதையடுத்து இரண்டாவது முறையாக இங்கிலாந்தின் பிரதமராக டேவிட் கேம்ரூன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் டேவிட் கேமரூன் அவரது விட்னி தொகுதியில் வெற்றி அடைந்துள்ளார். முன்னாள் பிரஞ்ச் அதிபர் நிக்கோலா சார்க்கோசி டேவிட் கேம்ரூனுக்கு தனது வலைத்தளம், மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லிபரல் ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வின்செண்ட் கேபிள் மற்றும் முன்னாள் அமைச்சர் எட் டேவி, முன்னாள் தலைமை கருவூல செயலர் டேனி அலெக்ஸாண்டர் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
இந்த தேர்தலில் ஸ்காட்லாந்தின் ஆளும் பிராந்தியக் கட்சியான, ஸ்காட்லாந்து தேசியக் கட்சி அந்த மாகாணத்தின் 59 தொகுதிகளில் 55 இடங்களை வென்று நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது.