செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 13 ஐ முழுமையாக அமுல்படுத்துக! – திகாவும் அழுத்தம்

13 ஐ முழுமையாக அமுல்படுத்துக! – திகாவும் அழுத்தம்

1 minutes read

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கு நாம் பூரண ஆதரவு.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசு பல வழிகளிலும் முயற்சித்து வருகின்றது. தோல்விப் பயத்தாலேயே யானை – மொட்டு கூட்டணி தேர்தலை இழுத்தடிப்புச் செய்ய பார்க்கின்றது. ஆனாலும், தேர்தலை ஒத்திவைக்க முடியாது என நம்புகின்றோம்.

இந்தத் தேர்தலில் எமக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. களநிலைவரம் மாறியுள்ளது.

தேர்தல் பிரசார மேடைகளில் தனிப்பட்ட ரீதியில் மாற்றுக் கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து – தெளிவுபடுத்தி பிரசாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

அதேவேளை, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கு நாம் பூரண ஆதரவு. அதேபோல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். நான் அமைச்சரவையில் இருந்தபோதும் இதனைத் தொடர்ச்சியாக வலியுறுத்தினேன்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More