அந்தோனி புரூட்டோ 1939-ம் ஆண்டு கிழக்கு விர்ஜினியா பல்கலைகழகத்தில் பொறியியல் படிக்கத் தொடங்கினார். ஆனால் அந்த துறையில் தனக்கு சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்காததாக நினைத்து உடற்கல்வி மற்றும் தொழிற்கலைப் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
1942-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடிக்கும் தறுவாயில் இரண்டாம் உலகப்போரில் விமான சேவை புரிவதற்காக சென்று விட்டார். சரியாக மூன்றரை வருடங்கள் கழித்து போர் முடிந்த பிறகு உள்ளூர் சிமெண்ட் தொழிற்சாலையில் அப்பா மற்றும் சகோதரர்களுடன் வேலை செய்ய ஆரம்பித்தார்.
அப்போதும் தனது படிப்பைத் தொடரும் லட்சியம் அவரிடம் இருந்தது. 1946-ம் ஆண்டு மீண்டும் விர்ஜினியா பல்கலைகழகத்தில் சேர்ந்து தனது விட்டுப்போன பட்டப்படிப்பை முடிக்க நினைத்தார். ஆனால் இந்த முறை அவரது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மீண்டும் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.
இப்படியாக பல போராட்டங்களுக்கிடையிலும் இந்த மாதம் தனது பட்டப்படிப்பை முடித்துள்ள அவர், வருகிற மே 17-ம் தேதி தனது கலைப்படிப்பிற்காக பட்டம் பெற இருக்கிறார். ”பல்கலைகழகத்தில் பட்டம் பெறுவது என் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று” என்று சொல்லி தம்ஸ் அப் காட்டுகிறார் இந்த 94 வயது தாத்தா.