நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீண்டும் 3 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இந்த மூன்று நில அதிர்வுகளும் ரிக்டர் அளவுகோலில் 4 அலகுகளுக்கு மேலாகப் பதிவானது.
இதுகுறித்து நேபாளத்தின் தேசிய நிலநடுக்க மைய அதிகாரிகள் கூறியதாவது:
சிந்துபால் செüக் மாவட்டத்தை மையமாகக் கொண்டு அதிகாலை 1.50 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
உதய்ப்பூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு அதிகாலை 2.44 மணியளவில் இரண்டாவது நில அதிர்வு ஏற்பட்டது.
திபெத் பகுதியை மையமாகக் கொண்டு காலை 6.34 மணியளவில் மூன்றாவது நில அதிர்வு ஏற்பட்டது. எனினும், இந்த அதிர்வுகள் மூலம் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
15